×

கல்லூரி மாணவி மனு நிராகரிப்பு

சேலம் மாநகராட்சி 5வது வார்டில் நாம்தமிழர் கட்சி சார்பில் அரசு கலைக்கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் காவியா என்ற மாணவி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமொழி பரிசீலனை செய்தார். அப்போது உங்களுக்கு 21 வயது பூர்த்தியாக இன்னும் 4 மாதம் உள்ளது. இதனால் போட்டியிட முடியாது, எனவே மனு நிராகரிக்கப்படுவதாக அலுவலர் மணிமொழி தெரிவித்தார். அப்போது மாணவி காவியா, வேட்புமனு தாக்கலுக்கு முன் நான் அலுவலகத்தில் கேட்டபோது 18 வயது பூர்த்தியான யாரும் போட்டியிடலாம் என கூறினர், என்றார். இதையடுத்து அவரிடம் தேர்தல் ஆணைய விதிமுறை கையேட்டை எடுத்து காண்பித்து 21 வயது பூர்த்தியானால் தான் போட்டியிட முடியும் என்பதை அலுவலர் மணிமொழி சுட்டிக்காட்டி மனுவை நிராகரித்தார். இதைத்தொடர்ந்து காவியா, தனது மனு நிராகரிக்கப்பட்டது குறித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்குமாறு கேட்டு அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்….

The post கல்லூரி மாணவி மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kavya ,Government Arts College ,Namtamizhar Party ,Salem Corporation ,5th Ward ,Dinakaran ,
× RELATED மழை நீரை சேகரிப்பதற்காக நாட்டு...